காட்டுவாசிதொலைகாட்சி தொடர்களின் நாயகிகள் நலம்தானா?
நகம் கடித்து,வெற்றுப்பெட்டியை உற்றுப்பார்க்கும் பாட்டி,
சிறு நேரம் சுழலபோகும் காத்தடிக்காக
நெடு நேரம் உறங்க, அறையின் நடுவில் பாய் விரித்த அப்பா,
அடுத்த நாள் இட்லிக்காக அவசரமாக மாவரைக்க காத்திருக்கும்
கடமை தவறாத அம்மா,
கைபேசி கவிழ்த்துவிடுமோ? கனத்த நெஞ்சுடன் அண்ணன்,

வரும் தேர்வுகள் வருத்தமாக்கிவிடுமோ? 
வானத்தை பார்த்து கொண்டே நான்,
அவசரவிளக்கு உமிழும் அற்ப வெளிச்சத்தில்
குட்டி தம்பி படித்தான் 
"மின்சாரத்தை கண்டு பிடித்தது பெஞ்சமின் பிராங்கிளின் என்று"
கண்டதை தொலைத்தவர் யாரோ???
காரிருளில் வாழ்வதற்க்கு பதில்  காட்டுவாசியாய் பிறந்திருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....