புல‌ம்ப‌ல்க‌ளும் முக்கிய‌ம்--published in youthful vikatan

விடிந்தது என் அறிவிக்கும் மணியோசை..
விதியென வேலைக்கு செல்லும் அவசரம்
வெந்ததை விழுங்கிவிட்டு, வேகாததை மென்றுவிட்டு
சாலைகளின் நெரிசலை காலையில் கடக்கும் துயரம்.
சிறு பிள்ளையின் அழுகை போல சிணுங்கும் செல்போன் அழைப்புகள்,
படுத்திவைக்கும் பணிச்சுமைகள்..
வளைகுடா வசந்தம் என்று எவன் சொன்னது???
தொல்லைகளுக்கு இடைவேளை விட்டு விடுமுறைக்கு வீடு திரும்பினால்
விழி நோக்கும் சுற்றம் விசாரிப்புகளுக்கு பின் வேண்டுவது
" விசா ஏதும் இருக்கா? "
இல்லையென‌ என் பதிலுரைக்கும் போது "பாருங்கள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்"
என் காவிரியின் கோரிக்கை போல் நீளும்...
அருகில் வந்த சுற்றத்தின் செய்தி , தொலைவில் இருந்து உள் எரிச்சல் உடன்
உரசும் காதுகளை " பெரிய வீடு கட்டிப்புட்டானே"
நிம்மதிகள் இங்குதான் என இளைப்பாறும் போது சுள் என சுடும் கேள்விகள்
" எப்ப பயணம்? "
நாட்கள் நகர, இல்லத்தாளின் இயல்பும் மாறி , விழி அறிவிக்கும் விடை
தெரியா கேள்வி  " இங்கே இருந்திருவானோ?  "
விடுமுறையின் வெருப்பு ,கர்ப்ப காலம் இன்றி உடனே பிரசவிக்கும்
ஒடியாடும் செல்லமகள் , சிரித்து கொண்டே எச்சரிக்கை மணியடிப்பாள்
" நான் வளர்கிறேன் தந்தையே...."
எதிர் காலம் வளமாக, நிகழ் காலம் சுமையாக ,
அலுமினிய பறவையின் அடுத்த பயணத்திற்க்கு..
டிராவல் ஏஜண்டுகளின் அலுவலக வாசலில்..
எனது விடுமுறை இனிதே நிறைவேறியது..
உயிர் வாழ‌ காற்று , நீர், ம‌ழை என‌ சொன்ன‌வ‌னுக்கு
சொல்லுங்க‌ள்- புல‌ம்ப‌ல்க‌ளும் முக்கிய‌ம் என்று... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....