- அறந்தை அபுதாகிர் த மிழகம் எப்போதும் தண்ணீருக்காக தவமிருக்க வேண்டும் என்பது தலைவிதி போலும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வரிசையில் தற்போது கேரளமும் வரிந்துகொண்டு நிற்கிறது. முல்லைப் பெரியாறு தீர்வுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு டிசம்பர் 5-தேதி இறுதி கட்ட கூட்டத்தை கூட்டப்பட வேண்டிய நிலையில், நீதியின் நியாமான பார்வையை தடுக்க முயல்கின்றது கேரளம், "அழுத பிள்ளை பால் குடிக்கும்," என அழிச்சாட்டியம் செய்கிறது. கர்னல் பென்னி குக்கினால் கி.பி.1895-ல் கட்டி முடிக்கப்பட்டு, தென் தமிழகத்தை வளமாக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என கூக்கிரலிடுகிறது கேரளா. நில நடுக்கத்தினால் அணை உடைந்து, கேரளாவின் 4 மாவட்டங்கள் அழிந்துவிடும் என பொய் பிரசாரத்தில் உச்சாஸ்தாயில் உளருகிறது, அம்மாநில அரசு. உலக வரலாற்றில் இதுவரை அணைகள் உடைந்தற்கு காரணம், பெரும் மழையினால் ஏற்படுகின்ற வெள்ளமும், கட்டுமான குறைபாடுகளுமே. சமீபத்தில் வெளிவந்த 'டேம் 999' என்ற திரைப்படம், சீனாவின் ஹீய் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பான்கியோ அணை 1975-ல் உடைந்ததை பற்றி கூறினாலும், இதன...