இடுகைகள்

ஹிட்லர்களும் பிரச்சனைகளும்
புதிய இந்தியா  என்று சொல்லப்படும்  அதே பழைய இந்தியாவின்  வாலில்  புதிய பிரச்னை பிறந்த போது , பழைய பிரச்சனைகள் பரணில் ஒதுங்கின... . கேடுகெட்ட அரசு என எதிர்க்கட்சிகள் முழங்கின .. பிரச்சனைகளின் மூலகர்த்தா  நீங்கள்தான் என ஆளும்கட்சி அமைச்சர்  திருப்பியடித்தார் தன்  முடியில்லா  தலையை தடவியபடி .. கொஞ்சூண்டு மானமுள்ள இன்னொரு அமைச்சர் மத்திக்கு  கத்தியை காட்டினார்.... வந்து பார் ....  மத்தியில் இருந்து ஒரு சுத்தி வந்தது  தாக்கீதுடன்  "ஆப்பு விரைவில் அடிக்கப்படும் " என்று  வந்த வேகத்தை கண்டு..  ஐம்புலன்களையும் அடக்கி அமரானார் தற்காலிகமாக  அந்த மானஸ்தன் மந்திரி . இவங்களுக்கு வேறு வேலையில்லை என கறை  படிந்த  கையை கன்னத்தில்  வைத்து  உறங்க போனது அரசு 
நெட்டிசன்கள் குட்ட துவங்கினார்கள்  நாயே,பேயே  என துவங்கிய வசவுகள்  சமூக வலைத்தளத்தில் சாக்கடையாக  ஓடின .. கவலையே படவில்லை அவர்கள் .. மாறாக  எல்லாம் சரி என்றது  இயல் , இசை .. அதற்கும் கேட்க முடியாத ராகத்தில் பதில் இசை  பல்லிளித்தன . 
எதிர்கட்சிகள் மனித சங்கிலியாயின .. மதி கேட்ட அரசே .   மானம் கெட்டவர்களே ..  தெருவி…
படம்
Posted Date : 14:11 (10/10/2015) Last updated : 17:22 (10/10/2015) 'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!

திப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு,

நீங்கள் எப்போதாவது வந்து போகும் இந்தியாவில், கருப்பு பண பங்கு தொகை 15 லட்சம் வாங்கி, புல்லெட் ரயிலில் பயணிக்க காத்திருக்கும் ஒரு இந்தியனின் கடிதம் இது...

உங்கள் விமானம் எப்போதாவது இந்தியாவைக் கடந்து சென்றால், எட்டிப் பாருங்கள்... ஜன்னல் வழியே! எங்கும் பச்சை பசேல் என தெரிய வேண்டியவை கொஞ்சம் பச்சை, கொஞ்சம் கருப்பாக, வெளிர் மஞ்சளாக தெரியும். பருவ மழை பொய்த்த பின் பாழாய்ப் போன நிலங்கள் அவை

அந்த நிலங்களின் விவசாயிகளோ வானம் பார்த்து வறண்டவர்கள். மானியங்களைத் தொலைத்த மனிதர்கள். முடிவாக மானம் காக்க ஒரு முழ கயிற்றில் தொங்கி உயிர் விட துணிந்தவர்கள். 

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயியின் அடுத்த தலைமுறையினர், வேகமாக விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். கடும் இன்னல்களுக்கு இடையே தவிக்கும் விவசாயிகளின்  கொஞ்ச நஞ்ச நிலங்களையும் உருவ முயற்சித்த தங்களின் நில சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு…

'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!- published in Vikatan.com

படம்
மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு,

நீங்கள் எப்போதாவது வந்து போகும் இந்தியாவில், கருப்பு பண பங்கு தொகை 15 லட்சம் வாங்கி, புல்லெட் ரயிலில் பயணிக்க காத்திருக்கும் ஒரு இந்தியனின் கடிதம் இது...

உங்கள் விமானம் எப்போதாவது இந்தியாவைக் கடந்து சென்றால், எட்டிப் பாருங்கள்... ஜன்னல் வழியே! எங்கும் பச்சை பசேல் என தெரிய வேண்டியவை கொஞ்சம் பச்சை, கொஞ்சம் கருப்பாக, வெளிர் மஞ்சளாக தெரியும். பருவ மழை பொய்த்த பின் பாழாய்ப் போன நிலங்கள் அவை

அந்த நிலங்களின் விவசாயிகளோ வானம் பார்த்து வறண்டவர்கள். மானியங்களைத் தொலைத்த மனிதர்கள். முடிவாக மானம் காக்க ஒரு முழ கயிற்றில் தொங்கி உயிர் விட துணிந்தவர்கள்.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயியின் அடுத்த தலைமுறையினர், வேகமாக விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். கடும் இன்னல்களுக்கு இடையே தவிக்கும் விவசாயிகளின்  கொஞ்ச நஞ்ச நிலங்களையும் உருவ முயற்சித்த தங்களின் நில சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு பின்வாங்கி உள்ளது. ஆனால் இது உண்மையில் கைவிடப்பட்டதா ... அல்லது, மாநில தேர்தலுக்கான பதுங்கலா?  தங்களுக்கே மட்டுமே தெரிந்த ரகசியம்.

என…

புரிந்தது ... புரியாதது

படம்

சிட்டுக்குருவி

ஓட்டுக்கூரையினுள் ஒளிந்து,
வீட்டுத்தோட்டங்களில் விருந்துண்டு,
முற்றத்தில் விளையாடிய,
சுறுசுறுப்பு சிட்டுக்குருவியை, சோம்பல் மனிதர்களின்,
செல்போன் கோபுரங்கள்,
அலைவீச்சில், கொலை செய்தன! நன்றிக்கடனாய்,
கைதொலை பேசிகள்
கருமாதி செய்கின்றன!

காட்டுவாசி

தொலைகாட்சி தொடர்களின் நாயகிகள் நலம்தானா? நகம் கடித்து,வெற்றுப்பெட்டியை உற்றுப்பார்க்கும் பாட்டி, சிறு நேரம் சுழலபோகும் காத்தடிக்காக நெடு நேரம் உறங்க, அறையின் நடுவில் பாய் விரித்த அப்பா, அடுத்த நாள் இட்லிக்காக அவசரமாக மாவரைக்க காத்திருக்கும் கடமை தவறாத அம்மா, கைபேசி கவிழ்த்துவிடுமோ? கனத்த நெஞ்சுடன் அண்ணன்,
வரும் தேர்வுகள் வருத்தமாக்கிவிடுமோ?  வானத்தை பார்த்து கொண்டே நான், அவசரவிளக்கு உமிழும் அற்ப வெளிச்சத்தில் குட்டி தம்பி படித்தான்  "மின்சாரத்தை கண்டு பிடித்தது பெஞ்சமின் பிராங்கிளின் என்று" கண்டதை தொலைத்தவர் யாரோ??? காரிருளில் வாழ்வதற்க்கு பதில்  காட்டுவாசியாய் பிறந்திருக்கலாம்.

முல்லைப் பெரியாறும் தேச ஒற்றுமையும்!- published in News Vikatan

படம்
- அறந்தை அபுதாகிர்
தமிழகம் எப்போதும் தண்ணீருக்காக தவமிருக்க வேண்டும் என்பது தலைவிதி போலும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வரிசையில் தற்போது கேரளமும் வரிந்துகொண்டு நிற்கிறது.

முல்லைப் பெரியாறு தீர்வுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு டிசம்பர் 5-தேதி இறுதி கட்ட கூட்டத்தை கூட்டப்பட வேண்டிய நிலையில், நீதியின் நியாமான பார்வையை தடுக்க முயல்கின்றது கேரளம், "அழுத பிள்ளை பால் குடிக்கும்," என அழிச்சாட்டியம் செய்கிறது.

கர்னல் பென்னி குக்கினால் கி.பி.1895-ல் கட்டி முடிக்கப்பட்டு, தென் தமிழகத்தை வளமாக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என கூக்கிரலிடுகிறது கேரளா. நில நடுக்கத்தினால் அணை உடைந்து, கேரளாவின் 4 மாவட்டங்கள் அழிந்துவிடும் என பொய் பிரசாரத்தில் உச்சாஸ்தாயில் உளருகிறது, அம்மாநில அரசு.

உலக வரலாற்றில் இதுவரை அணைகள் உடைந்தற்கு காரணம், பெரும் மழையினால் ஏற்படுகின்ற வெள்ளமும், கட்டுமான குறைபாடுகளுமே.

சமீபத்தில் வெளிவந்த 'டேம் 999' என்ற திரைப்படம், சீனாவின் ஹீய் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பான்கியோ அணை 1975-ல் உடைந்ததை பற்றி கூறினாலும், இதன் இயக்குநர் சோகன் ரா…