சிட்டுக்குருவி


ஓட்டுக்கூரையினுள் ஒளிந்து,
வீட்டுத்தோட்டங்களில் விருந்துண்டு,
முற்றத்தில் விளையாடிய,
சுறுசுறுப்பு சிட்டுக்குருவியை,
சோம்பல் மனிதர்களின்,
செல்போன் கோபுரங்கள்,
அலைவீச்சில், கொலை செய்தன!
நன்றிக்கடனாய்,
கைதொலை பேசிகள்
கருமாதி செய்கின்றன!
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....