இடுகைகள்

May, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஹிட்லர்களும் பிரச்சனைகளும்
புதிய இந்தியா  என்று சொல்லப்படும்  அதே பழைய இந்தியாவின்  வாலில்  புதிய பிரச்னை பிறந்த போது , பழைய பிரச்சனைகள் பரணில் ஒதுங்கின... . கேடுகெட்ட அரசு என எதிர்க்கட்சிகள் முழங்கின .. பிரச்சனைகளின் மூலகர்த்தா  நீங்கள்தான் என ஆளும்கட்சி அமைச்சர்  திருப்பியடித்தார் தன்  முடியில்லா  தலையை தடவியபடி .. கொஞ்சூண்டு மானமுள்ள இன்னொரு அமைச்சர் மத்திக்கு  கத்தியை காட்டினார்.... வந்து பார் ....  மத்தியில் இருந்து ஒரு சுத்தி வந்தது  தாக்கீதுடன்  "ஆப்பு விரைவில் அடிக்கப்படும் " என்று  வந்த வேகத்தை கண்டு..  ஐம்புலன்களையும் அடக்கி அமரானார் தற்காலிகமாக  அந்த மானஸ்தன் மந்திரி . இவங்களுக்கு வேறு வேலையில்லை என கறை  படிந்த  கையை கன்னத்தில்  வைத்து  உறங்க போனது அரசு 
நெட்டிசன்கள் குட்ட துவங்கினார்கள்  நாயே,பேயே  என துவங்கிய வசவுகள்  சமூக வலைத்தளத்தில் சாக்கடையாக  ஓடின .. கவலையே படவில்லை அவர்கள் .. மாறாக  எல்லாம் சரி என்றது  இயல் , இசை .. அதற்கும் கேட்க முடியாத ராகத்தில் பதில் இசை  பல்லிளித்தன . 
எதிர்கட்சிகள் மனித சங்கிலியாயின .. மதி கேட்ட அரசே .   மானம் கெட்டவர்களே ..  தெருவி…