இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!- published in Vikatan.com

படம்
மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு, நீங்கள் எப்போதாவது வந்து போகும் இந்தியாவில், கருப்பு பண பங்கு தொகை 15 லட்சம் வாங்கி, புல்லெட் ரயிலில் பயணிக்க காத்திருக்கும் ஒரு இந்தியனின் கடிதம் இது... உங்கள் விமானம் எப்போதாவது இந்தியாவைக் கடந்து சென்றால், எட்டிப் பாருங்கள்... ஜன்னல் வழியே! எங்கும் பச்சை பசேல் என தெரிய வேண்டியவை கொஞ்சம் பச்சை, கொஞ்சம் கருப்பாக, வெளிர் மஞ்சளாக தெரியும். பருவ மழை பொய்த்த பின் பாழாய்ப் போன நிலங்கள் அவை அந்த நிலங்களின் விவசாயிகளோ வானம் பார்த்து வறண்டவர்கள். மானியங்களைத் தொலைத்த மனிதர்கள். முடிவாக மானம் காக்க ஒரு முழ கயிற்றில் தொங்கி உயிர் விட துணிந்தவர்கள். இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயியின் அடுத்த தலைமுறையினர், வேகமாக விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். கடும் இன்னல்களுக்கு இடையே தவிக்கும் விவசாயிகளின்  கொஞ்ச நஞ்ச நிலங்களையும் உருவ முயற்சித்த தங்களின் நில சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு பின்வாங்கி உள்ளது. ஆனால் இது உண்மையில் கைவிடப்பட்டதா ... அல்லது, மாநில தேர்தலுக்கான பதுங்கலா?  தங்களுக்கே மட்டுமே தெரிந்த ரக