இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரிந்தது ... புரியாதது

படம்

சிட்டுக்குருவி

ஓட்டுக்கூரையினுள் ஒளிந்து, வீட்டுத்தோட்டங்களில் விருந்துண்டு, முற்றத்தில் விளையாடிய, சுறுசுறுப்பு சிட்டுக்குருவியை, சோம்பல் மனிதர்களின், செல்போன் கோபுரங்கள், அலைவீச்சில், கொலை செய்தன! நன்றிக்கடனாய், கைதொலை பேசிகள் கருமாதி செய்கின்றன!  

காட்டுவாசி

தொலைகாட்சி தொடர்களின் நாயகிகள் நலம்தானா? நகம் கடித்து,வெற்றுப்பெட்டியை உற்றுப்பார்க்கும் பாட்டி, சிறு நேரம் சுழலபோகும் காத்தடிக்காக நெடு நேரம் உறங்க, அறையின் நடுவில் பாய் விரித்த அப்பா, அடுத்த நாள் இட்லிக்காக அவசரமாக மாவரைக்க காத்திருக்கும் கடமை தவறாத அம்மா, கைபேசி கவிழ்த்துவிடுமோ? கனத்த நெஞ்சுடன் அண்ணன், வரும் தேர்வுகள் வருத்தமாக்கிவிடுமோ?  வானத்தை பார்த்து கொண்டே நான், அவசரவிளக்கு உமிழும் அற்ப வெளிச்சத்தில் குட்டி தம்பி படித்தான்  "மின்சாரத்தை கண்டு பிடித்தது பெஞ்சமின் பிராங்கிளின் என்று" கண்டதை தொலைத்தவர் யாரோ??? காரிருளில் வாழ்வதற்க்கு பதில்  காட்டுவாசியாய் பிறந்திருக்கலாம்.

முல்லைப் பெரியாறும் தேச ஒற்றுமையும்!- published in News Vikatan

படம்
- அறந்தை அபுதாகிர் த மிழகம் எப்போதும் தண்ணீருக்காக தவமிருக்க வேண்டும் என்பது தலைவிதி போலும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வரிசையில் தற்போது கேரளமும் வரிந்துகொண்டு நிற்கிறது. முல்லைப் பெரியாறு தீர்வுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு டிசம்பர் 5-தேதி இறுதி கட்ட கூட்டத்தை கூட்டப்பட வேண்டிய நிலையில், நீதியின் நியாமான பார்வையை தடுக்க முயல்கின்றது கேரளம், "அழுத பிள்ளை பால் குடிக்கும்," என அழிச்சாட்டியம் செய்கிறது. கர்னல் பென்னி குக்கினால் கி.பி.1895-ல் கட்டி முடிக்கப்பட்டு, தென் தமிழகத்தை வளமாக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என கூக்கிரலிடுகிறது கேரளா. நில நடுக்கத்தினால் அணை உடைந்து, கேரளாவின் 4 மாவட்டங்கள் அழிந்துவிடும் என பொய் பிரசாரத்தில் உச்சாஸ்தாயில் உளருகிறது, அம்மாநில அரசு. உலக வரலாற்றில் இதுவரை அணைகள் உடைந்தற்கு காரணம், பெரும் மழையினால் ஏற்படுகின்ற வெள்ளமும், கட்டுமான குறைபாடுகளுமே. சமீபத்தில் வெளிவந்த 'டேம் 999' என்ற திரைப்படம், சீனாவின் ஹீய் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பான்கியோ அணை 1975-ல் உடைந்ததை பற்றி கூறினாலும், இதன

புல‌ம்ப‌ல்க‌ளும் முக்கிய‌ம்--published in youthful vikatan

விடிந்தது என் அறிவிக்கும் மணியோசை.. விதியென வேலைக்கு செல்லும் அவசரம் வெந்ததை விழுங்கிவிட்டு, வேகாததை மென்றுவிட்டு சாலைகளின் நெரிசலை காலையில் கடக்கும் துயரம். சிறு பிள்ளையின் அழுகை போல சிணுங்கும் செல்போன் அழைப்புகள், படுத்திவைக்கும் பணிச்சுமைகள்.. வளைகுடா வசந்தம் என்று எவன் சொன்னது??? தொல்லைகளுக்கு இடைவேளை விட்டு விடுமுறைக்கு வீடு திரும்பினால் விழி நோக்கும் சுற்றம் விசாரிப்புகளுக்கு பின் வேண்டுவது " விசா ஏதும் இருக்கா? " இல்லையென‌ என் பதிலுரைக்கும் போது "பாருங்கள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்" என் காவிரியின் கோரிக்கை போல் நீளும்... அருகில் வந்த சுற்றத்தின் செய்தி , தொலைவில் இருந்து உள் எரிச்சல் உடன் உரசும் காதுகளை " பெரிய வீடு கட்டிப்புட்டானே" நிம்மதிகள் இங்குதான் என இளைப்பாறும் போது சுள் என சுடும் கேள்விகள் " எப்ப பயணம்? " நாட்கள் நகர, இல்லத்தாளின் இயல்பும் மாறி , விழி அறிவிக்கும் விடை தெரியா கேள்வி  " இங்கே இருந்திருவானோ?  " விடுமுறையின் வெருப்பு ,கர்ப்ப காலம் இன்றி உடனே பிரசவிக்கும் ஒடியாடும் செல

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....

19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பங்களில் இந்தியாவை வந்தடைந்த மின்சாரம் இன்றுவரை தேவையை பூர்த்தி அடையாமல் தவிக்க விடுகிறது. உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் உள்ள இந்தியா உபயோகிப்பதோ உலக மின் உற்பத்தியில் வெறும் 4 சதவீதம் மட்டும்தான். இதை கூட தட்டுபாடின்றி அளிக்க இயலாமல் திணறுகிறது அரசாங்கம். மனித வாழ்க்கையின் தேவைகளின் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது மின்சாரம். உயர்ந்து வரும் மக்களின் வாழ்க்கை தரம்,குளிர் சாதனங்களின் பயன்பாடு  அதிகரிப்பு , வளரும் கட்டமைப்புகள் என மின்சாரத்தின் தேவையை ஆண்டொன்றுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கிறது. தற்போதைய தேவையை அளிக்க இயலாதவர்கள் எதிர்காலத்தை பற்றி எங்கே சிந்திக்க போகிறார்கள்?? மின் தட்டுப்பாடு சாமனிய மக்களை மட்டும் பாதிப்பது இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சுமையாகவும், தடையாகவும் இருக்கிறது. பருவ கால மாற்றத்தினால் பாதிக்கப்படும் நீர் மின்சக்தி, நிலக்கரி தட்டுப்பாடினால் பாதிக்கும் அனல் மின் சக்தி, அணு மின் நிலையங்களுக்கு மக்களின் எதிர்ப்பு என காரணங்களை காட்டி தப்பிக்க கூடாது ஒரு பொறுப்புள்ள அரசாங்கம். வளர்ந்த நாடுகள் கோடை க